மூன்றாவது மொழி கற்பது எங்கள் எதிர்காலம் சிறக்கும், வேலைவாய்ப்பு பெருகும் மனம் திறக்கும் மாணவர்கள்
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு வேறு எந்த மாநி-லத்திலும் வராத எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது. புதிய கல்-விக்கொள்கையின் படி மாணவர்கள் பள்ளியில் மூன்று மொழியை கற்கவேண்டும். முதலில் தாய்மொழி, அடுத்து ஆங்-கிலம், மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம். ஹிந்தியை தான் கற்க வேண்டும் என்று நிர்பந்தம் இல்லை. ஆனால் ஹிந்-தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தமிழகத்தில் கருத்து பரவு-கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் காங்., ஆட்சியில் இருந்த போதும் சரி, தற்போது மார்க்சிஸ்ட் ஆட்சியிலும் சரி அங்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் தான் அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாக கேரளா திகழ்கிறது. காங்., ஆளும் கர்நாடகாவிலும் மூன்றாவது மொழியை கற்பிக்கின்றனர். மாணவர்கள் விரும்பி கற்பதை தமிழக அரசியல்வாதிகள் தடுப்-பது ஏன், மாணவர்களின் படிப்பில் அரசியல் என்பது தமிழ-கத்தில் தான் நடக்கிறது. யாருடைய எதிர்காலத்தை வைத்து அர-சியல் நடக்கிறதோ... அவர்களிடமே (மாணவர்கள்) மூன்றாவது மொழியை கற்பது குறித்து கேட்டோம்...ஈரோடு மாணவர்கள் கூறியதாவது:
தன்னம்பிக்கை தரும் மொழிசுகிர்தன்பல்வேறு மொழிகளின் அறிவு முக்கியம். தற்போது கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு, பிற மாநிலங்களுக்கு செல்கின்-றனர். அதிக மொழி தன்னம்பிக்கையை கொடுக்கும். திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப வருவாயை தேடி செல்ல மொழி முக்கியம். ஹிந்தி மட்டுமல்ல ஏதாவது ஒரு மொழியை அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் கற்க வழிவகை செய்ய வேண்டும். மும்மொழி அதாவது தமிழ், ஆங்கிலம் மட்டு-மின்றி பிற மொழிகளும் கட்டாயம் தேவை. பல்வேறு மொழி-களை கற்பதால் மாணவ-மாணவிகளின் வாழ்வாதாரம் மாறும்.தமிழகத்தை தாண்டினால் ஹிந்தி வேகாஸ்ரீதமிழக மாணவ, மாணவியருக்கு மும்மொழி திட்டம் தேவை. தமிழகத்தை தவிர பிற மாநிலங்களுக்கு செல்ல ஹிந்தி தேவை. பல்வேறு மொழிகள் கற்றறிந்தால் வேலை வாய்ப்பு எளிதாகும். அனைத்து பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் தவிர பிற மொழி-யையும் கற்று கொடுக்க வேண்டும்.தடையாக இருக்காத மொழி பிரவிக்ஷாபொதுவாக கர்நாடகாவில் இருப்பவர்களுக்கு நான்கு மொழி தெரியும். கேரளாவில் வசிப்பவர்களுக்கு தமிழ் தெரியும். ஆனால் தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் தவிர பலருக்கு ஏதும் தெரியாது. பல்வேறு மொழிகள் தெரிந்தால் நல்லது தான். நான் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிக்கிறேன். கல்வி, வேலை வாய்ப்பு எளிதில் பெற தடையாக மொழி இருக்க கூடாது. வேண்டாத பாடப்பிரிவுகளை நீக்கி விட்டு மொழிகளை கற்க தேவையான வசதிகளை செய்து தரலாம்.பள்ளிகளில் மொழியறிவு தேவைதிலகன்வட மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. சிறு வயதிலேயே மாணவ, மாணவியர்களுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகளை கற்று கொடுக்க பள்ளிகளில் வழிவகை செய்ய வேண்டும். பிற மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு செல்லும் வகையில் பிற மொழிகளையும் கற்க வேண்டும். சிறு வயதில் பல்வேறு மொழிகளை கற்க செய்தால் மாணவ, மாணவி-யருக்கு எளிதாக இருக்கும்.மொழிகளை கற்க ஏது எல்லைசுதிர்தாய் மொழியாக தமிழ் மட்டுமின்றி அகிலமெங்கும் சென்று வர ஆங்கிலம் கற்கலாம். மூன்றாம் மொழி என ஏதும் இல்லை. எத்தனை மொழிகளை கற்க முடியுமோ அவற்றை கற்றுணர மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண் டும். எங்கள் எதிர்காலம் சிறக் கும், வேலைவாய்ப்பு பெருகும்.தொடர்பு திறன் வளர்க்கும் மொழிஅருனிகா யாழ்விழிதமிழக பள்ளிகளில் ஹிந்தி கற்று கொடுக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் தவிர ஹிந்தி உள்ளிட்ட மொழியை கற்க எதிர்ப்பது சுயநலம். தொடர்பு திறனை வளர்த்து கொள்வது அவசியம். இதற்கு பல்வேறு மொழியை கற்பது நல்லது. ஹிந்தி மொழியை பள்ளி அளவில் கட்டாயம் கற்க வழிவகுக்க வேண்டும்.