உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் வட்டாரத்தில் விடிய விடிய மழை

கரூர் வட்டாரத்தில் விடிய விடிய மழை

கரூர்,: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்தது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, தென் மேற்கு வங்க கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்: கரூர், 4.20, அரவக்குறிச்சி, 14.20, அணைப்பாளையம், 12.40, க.பரமத்தி, 4, குளித்தலை, 5, கிருஷ்ணராயபுரம், 12.50, மாயனுார், 10, பஞ்சப்பட்டி, 4.40 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 5.59 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி