உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மயானத்துக்கு மின் விளக்குகள் அமைப்பு

மயானத்துக்கு மின் விளக்குகள் அமைப்பு

கரூர்:கரூர் மாநகராட்சி, வெங்கமேடு என்.எஸ்.கே., நகரில் உள்ள மின் மயானம், கடந்த, 2020-21ல், 15வது நிதிக்குழு மானியத்தில் மேம்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இறந்தவர்களின் உடல்களை, அடக்கம் செய்வதில் பிரச்னை உள்ளதாக, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது.குறிப்பாக, தீப்பந்தம் அல்லது மொபைல் போன் வெளிச்சத்தில் இறுதி சடங்குகள் நடப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கரூர் மாநகராட்சி சார்பில், என்.எஸ்.கே., நகரில் உள்ள, மயானத்தில் புதிதாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ