உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடவூர் தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கடவூர் தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கரூர், டிச. 20-கடவூர் தாலுகாவில், உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமில், கலெக்டர் தங்கவேல், இரண்டாம் நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அதில், வீரணம்பட்டி பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கம் அருகே, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதையும், விவசாயிகளிடமிருந்து தினசரி பால் கொள்முதல் செய்யப்படுவதையும் பார்வையிட்டு, விவசாயிகளிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின், வீரணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், முதல்வர் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தின் சுகாதாரம் குறித்தும், உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களின் தரம் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி, ஆவின் துணை பதிவாளர் (பால் வளம்) கணேசன், பொது மேலாளர் பிரவீனா தங்கராஜ், தாசில்தார் இளம்பருதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், முத்துக்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !