உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தம்பதியரை கல்லால் அடித்தவர் கைது

தம்பதியரை கல்லால் அடித்தவர் கைது

கரூர், கரூர் முத்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்,55. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், 24, நிர்மலா, 48, ஏமூர் பகுதியை சேர்ந்த பரத் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த, 20ல் இரவு சரவணன், மனைவி லட்சுமி, 50, யுடன், கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆகாஷ், நிர்மலா, பரத் ஆகியோர் தகாத வார்த்தை பேசி, சரவணன், அவரது மனைவி லட்சுமியை கல்லால் அடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த சரவணனும், லட்சுமியும் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து, சரவணன் கொடுத்த புகாரின்படி, ஆகாசை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய நிர்மலா, பரத் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை