உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துப்பாக்கி காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

துப்பாக்கி காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

குளித்தலை, குளித்தலை அடுத்த வைகைநல்லூர் பஞ்., மேல்மைலாடியை சேர்ந்தவர் குமார், 42, விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணியளவில் கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் குளித்து விட்டு, கரையில் உள்ள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின், பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.அப்போது, சிவாயம் பஞ்., மேல கோவில்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை மகன் மாயவன், 27, என்பவர் குமாரை வழிமறித்து, சட்டை பையில் இருக்கும் பணத்தை கொடுக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். பணம் தரவில்லை என்றால், உன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.உடனே குமார் அங்கிருந்து தப்பித்தார். புகார்படி, குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடம்பர் கோவில் ஆற்றுப் படுகை விநாயகர் கோவில் முன் பதுங்கியிருந்த மாயவனை பிடித்தனர். பின்னர், குளித்தலை நீதிபதி முன் மாயவனை ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி