மொபட்டில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு
மொபட்டில் இருந்துவிழுந்தவர் உயிரிழப்புஈரோடு, நவ. 28-ஈரோடு, கைகாட்டிவலசு ஈகிள் கார்டனை சேர்ந்தவர் பரசுராமன், 60. தறி பட்டறை தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு தனது மொபட்டில் கைகாட்டி வலசு அருகே சென்று கொண்டிருந்தார். திடீரென நிலை தடுமாறி, மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் பின் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.