உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

கரூர்:கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி, 55; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், டி.வி.எஸ்., மொபட்டில் சின்ன தாராபுரம்-ஆண்டிப்-புதுார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மொபட் சறுக்கி கட்டுப்பாட்டை இழந்ததில், கருப்புசாமி கீழே விழுந்தார். ஹெல்மெட் அணியாததால், தலையில் படுகாயமடைந்த கருப்பு-சாமியை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு கருப்புசாமி உயிரி-ழந்தார். இதுகுறித்து, கருப்புசாமியின் மனைவி பேபி, 42, அளித்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !