மேலும் செய்திகள்
காரில் தேசியக்கொடி கட்டிய வாலிபர் கைது
25-May-2025
கரூர் :கரூரில், தொழில் போட்டி காரணமாக தந்தை, மகனை கத்தியால் குத்திய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் அருகே, சின்ன ஆண்டாங்கோவில் பாங்க் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், 48; கிரில் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த, 5ம் தேதி இரவு வீட்டுக்கு முன், மகன் லோகித்ராஜூடன், 18, பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கரூர் எஸ்.வெள்ளாப்பட்டியை சேர்ந்த குமரன் என்பவர், செந்தில்குமார், அவரது மகன் லோகித்ராஜ் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பினார்.அதில், படுகாயமடைந்த இருவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, செந்தில்குமார் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் குமரனை கைது செய்து விசாரித்தனர். அப்போது, தொழில் போட்டி மற்றும் முன் விரோதம் காரணமாக, செந்தில் குமார், லோகித்ராஜை, கத்தியால் குத்தியது தெரியவந்தது.
25-May-2025