உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமராவதி ஆற்று பகுதியில் தேங்கிய குப்பையை அகற்ற மாரியம்மன் பக்தர்கள் வேண்டுகோள்

அமராவதி ஆற்று பகுதியில் தேங்கிய குப்பையை அகற்ற மாரியம்மன் பக்தர்கள் வேண்டுகோள்

கரூர், கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திரு விழா இன்று தொடங்குகிறது. இதனால், அமராவதி ஆற்றுப்பகுதிகளில் குப்பையை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திரு விழா இன்று கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது. இன்று காலை, பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக, பாரம்பரிய வழக்கப்படி கம்பம் கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் ஒப்படைக்கப்படும்.பிறகு, கம்பம் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, இன்று இரவு கோவில் நுழைவு வாயில் பகுதியில் நடப்படும். அதை தொடர்ந்து, வைகாசி திருவிழா தொடங்கும்.இந்நிலையில், பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப்பகுதிகளில், அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. அதை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம், அமராவதி ஆறு நீர்வள பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.இதனால், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா இன்று தொடங்கும் நிலையில், பக்தர்கள் வேதனையில் உள்ளனர். எனவே, பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப்பகுதியில் கம்பம் பூஜை செய்யப்படும் இடங்களில், குப்பையை அகற்ற கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ