மேலும் செய்திகள்
பால்குடம் ஊர்வலம்
17-May-2025
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் பல்லக்கில் திருவீதி வரும் நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை சிந்தலவாடியில் பிர-சித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அதை தொடர்ந்து, நேற்று மதியம், 12:40 மணிக்கு மாரியம்ம-னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர் மாலைகள் கொண்டு கட்டப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டு, கோவிலை சுற்றி மூன்று முறை திருவீதி பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. பின் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது. இதில் சிந்த-லவாடியை சுற்றியுள்ள கிராம மக்கள், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்-டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் லாலாப்பேட்டை போலீசார் ஈடுபட்டனர்.
17-May-2025