மருதுார் டவுன் பஞ்., ஆபீசில் காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., அலுவலகத்தில் பணியில் இருந்த வரித்தண்டலர் சரவணன், கடந்த, மூன்று மாதங்களுக்கும் மேலாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இளநிலை உதவியாளர் சரவணகுமார், பணியிடம் மாற்றமாக புலியூர் டவுன் பஞ்., அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பணியிடம் காலியாக இருந்து வருகிறது.இந்த இரண்டு பணியாளர்கள் கவனித்து வந்த பணிகள் முழுவ-தையும், அலுவலக பணியாளர்கள் கூடுதலாக மேற்கொள்ள முடி-யாமல் சிரமப்பட்டு வருகின்றனர். டவுன் பஞ்., மண்டல நிர்-வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் நலன்கருதி, மருதுார் டவுன் பஞ்., இரண்டு பணிகளுக்கும் புதிய பணியாளர்-களை போர்கால அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.