மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
08-Feb-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்-துவ முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் ப்ளோரா ராணி, வட்டார கல்வி அலுவலர்கள் தர்மராஜ், சங்கீதா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட மறுவாழ்வு மற்றும் மாற்றுத்-திறன் அலுவலர் மோகன்ராஜ், மானிய திட்டம், வங்கி கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசினார். முகாமில், 51 மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டனர். மனநல மருத்-துவர், கண் மருத்துவர், காது மருத்துவர், முட நீக்கியல் மருத்-துவர் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், 4 குழந்தைக-ளுக்கு புதிய அடையாள அட்டை, 8 குழந்தைகளுக்கு அடை-யாள அட்டை புதுப்பித்தல், 11 குழந்தைகளுக்கு, உபகரணங்கள் பரிந்துரை, ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை, 7 குழந்தைகளுக்கு அரசு தலைமை மருத்துவமனையில் பரிசோ-தனை செய்ய பரிந்துரை, 20 குழந்தைகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட ஐ.இ., ஒருங்கிணைப்பாளர் ராதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் உட-னிருந்தனர்.
08-Feb-2025