மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
27-Sep-2024
குளித்தலை: குளித்தலையில், நேற்று பொது மருத்துவம் மற்றும் மக்கள் நல்-வாழ்வு துறை சார்பில், வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். முகாமில் மருத்துவர்கள் தினேஷ், அய்யர்மலை ஹேமாவதி, ராஜ்மோகன், ரம்யா, சுகன்யா, கீர்த்தனா, நடமாடும் மருத்துவர் ரமேஷ், பல் மருத்துவர் சபரீஷ், கண் பரிசோதகர் முருகன், குளித்தலை சகிலா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் பொது மக்களுக்கும், அங்கன்வாடி ஆசிரியர், பணியாளர்கள், 13 பஞ்., மற்றும் இரு டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு மார்பக பரிசோதனை, ரத்தம், சளி, சிறுநீர், கர்ப்ப-ணிகளுக்கு ஸ்கேன், ரத்த அழுத்தம், சர்க்கரை, கண், பல் உள்-ளிட்ட பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது.தொடர்ந்து, பொது மக்களுக்கு உணவு பழக்க வழக்கம், உடல் நலம் கண்காணித்தல் குறித்து விழிப்புணர்வு, யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் உறுதி மொழி வாசிக்க அனை-வரும் ஏற்றுக்கொண்டனர்.தொடர்ந்து, பொது மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.
27-Sep-2024