உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாந்திவனம் காப்பகத்தினர் மீட்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாந்திவனம் காப்பகத்தினர் மீட்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., நெய்தலுார் காலனி பகு-தியில், 25 வயது மதிக்கத்தக்க வெளிமாநில பெண் ஒருவர், மன-நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிவதாக சாந்திவனம் காப்பக இயக்-குனர் அரசப்பனிடம், அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, சாந்திவனம் ஒருங்கி-ணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, மேற்பார்வை-யாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட மீட்பு குழுவினர், சம்-பவ இடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டு, திருச்சி, தில்லை-நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, சாந்திவனம் மனநல மருத்துவர் ராஜராம், அப்-பெண்ணை பரிசோதித்து, மனநல சிகிச்சைக்காக மருத்துவம-னையில் அனுமதித்தனர். சாந்திவனம் - மனநல காப்பகத்திற்கு மாற்றப்படுவார். அங்கு குணமடைந்தவுடன், அவரது முகவரி கண்டுபிடிக்கப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ