இயற்கை வேளாண்மை திருவிழா எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு
கரூர்: கரூர் விவசாயிகள் சங்கம், நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் சார்பில், நேற்று கொங்கு திருமண மண்டபத்தில், இயற்கை வேளாண்மை திருவிழா நடந்தது. திருவிழாவை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து, கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்-வையிட்டார். அதைதொடர்ந்து, சிறப்பு பயிற்சி பட்டரை என்ற தலைப்பில், முன்னோடி விவசாயிகள் பேசினர். மேலும், இயற்கை உணவு செய்முறை பயிற்சி செய்து காண்பிக்-கப்பட்டது. பொதுமக்களுக்கு, பல்வேறு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், இலவசமாக வழங்கப்பட்டது.விழாவில், இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷன், செயலாளர் சிவக்குமார் மற்றும் கரூர் ஜே.சி.ஐ., டைமண்ட், யங் இன்டியன்ஸ் அமைப்-பினர் பங்கேற்றனர்.