உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிட்டரிடம் மொபைல் பறிப்பு: ஒருவர் கைது

பிட்டரிடம் மொபைல் பறிப்பு: ஒருவர் கைது

கரூர், டிச. 29-க.பரமத்தியில், துணை மின் நிலைய பிட்டரிடம், மொபைல் போன், பணம் பறித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜியா வுல் ஹக், 30; கரூர் அருகே, க.பரமத்தியில் உள்ள, துணை மின் நிலையத்தில் பிட்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 10 இரவு க.பரமத்தி கோவை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, டூவீலரில் வந்த ஒருவர், ஜியா வுல் ஹக் வைத்திருந்த, இரண்டு மொபைல் போன், 5,000 ரூபாயை பறித்து கொண்டு சென்று விட்டார். இதுகுறித்து, ஜியா வுல் ஹக் கொடுத்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார், விசாரித்து வந்தனர்.இந்நிலையில், ஜியா வுல் ஹக்கிடம் மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்தவர் கரூர் வெங்கமேடு ஜோசியக்கார தெருவை சேர்ந்த கார்த்திக், 24; என தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை, க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ