அரவக்குறிச்சியில் மிதமான மழை
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், ஈசநத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், மிதமானது முதல் கனமழை மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, கடுமையாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணியளவில் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. மேலும் அருகில் உள்ள பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், ஈசநத்தம், மலைக்கோவிலுார், ராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், மிதமான மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.