உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வஞ்சலீஸ்வரர் கோவிலில் சோமவார விழா பூஜை

வஞ்சலீஸ்வரர் கோவிலில் சோமவார விழா பூஜை

வஞ்சலீஸ்வரர் கோவிலில்சோமவார விழா பூஜைகரூர், நவ. 26-கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, விசாலாட்சி சமேத வஞ்சலீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.கார்த்திகை மாத திங்கள் கிழமையை, சோமவாரம் என அழைப்பதுண்டு. சோமன் என்றால் பார்வதியுடன் இணைந்திருக்கும் ஈஸ்வரன் என்பது பொருள். இதனால், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், திங்கள் கிழமையில், சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.கரூர் உழவர் சந்தை அருகே உள்ள, விசாலாட்சி சமேத வஞ்சலீஸ்வரர் கோவிலில், சோமவாரத்தையாட்டி மூலவருக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம் மற்றும் 108 சங்காபி ேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் அருள் பாலித்தார். பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !