வேலை வாங்கி தருவதாக பண மோசடி: 2 பேர் மீது வழக்குப்பதிவு
கரூர்: கரூர் அருகே, ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாங்கி தருவ-தாக, இளம் பெண்ணிடம் பண மோசடி செய்த, 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அண்ணாமலை நகர் பகு-தியை சேர்ந்த சுப்பிரமணியம் மகள் கீர்த்தனா, 25. இவர், கரூரில், ஊரக வளர்ச்சி துறையில், தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஊரக வளர்ச்சி துறையில் நிரந்தர வேலை, வாங்கி தருவதாக திருச்சியை சேர்ந்த பெண் சிவசக்தி, தஞ்சாவூரை சேர்ந்த நரேந்-திரன் ஆகியோர், கீர்த்தனாவிடம் கூறியுள்ளனர். அதை உண்மை என நம்பிய கீர்த்தனா கடந்த, 25ல் சிவசக்திக்கு, 'ஜிபே' மூலம், ஏழு லட்சத்து, 85,000 ரூபாயும், நரேந்திரனுக்கு, 'ஜிபே' மூலம், ஒரு லட்சத்து, 89,000 ரூபாய் உள்பட, ஒன்பது லட்சத்து, 74,000 ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், இருவரும் கீர்த்தனாவுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கீர்த்தனா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, தான்தோன்றிமலை போலீசார், சிவசக்தி, நரேந்-திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.