உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை பகுதியில் கொசு ஒழிப்பு பணி மும்முரம்

லாலாப்பேட்டை பகுதியில் கொசு ஒழிப்பு பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை பகுதியில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை, ஆண்டியப்பா நகர், விட்டுக்கட்டி ஆகிய பகுதிகளில் கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்கும் வகையில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் வீடுகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்கும் வகையில், மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.வீடுகளில் தேவையில்லாத கழிவு குப்பைகளை அகற்றுதல், மழை நீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு, பிளாஸ்டிக் கழிவு, பழைய டயர்களை அகற்றுதல் ஆகிய பணிகளில் மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்டனர். பணிகளை சுகாதார மேற்பார்வையாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ