உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில் காசிம் சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

மோசமான நிலையில் காசிம் சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் எதிரேயுள்ள சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி காமராஜ் தினசரி மார்க்கெட் எதிரே உள்ள, காசிம் தெரு சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. காசிம் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.மழைக்காலங்களில் குண்டும், குழியுமான சாலையில், தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.எனவே, காமராஜ் தினசரி மார்க்கெட் எதிரே உள்ள, காசிம் சாலையை உடனடியாக, பராமரிக்கும் வகையில் புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை