மேலும் செய்திகள்
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
29-May-2025
கரூர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் ரயிலில், காங்., எம்.பி., ஜோதிமணி நேற்று ஆய்வு செய்தார்.கரூர் - திருச்சி மற்றும் சேலம் இடையே பல ஆண்டுகளாக டெமோ பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. அதில், கழிப்பிட வசதி இல்லாமல், பயணிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து, நமது நாளிதழிலும் செய்தி வெளியானது. கரூர் காங்., எம்.பி., ஜோதிமணியும், கழிப்பிட வசதியுடன் கூடிய ரயில் இயக்க வேண்டும் என, மத்திய ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.இந்நிலையில் கடந்த ஜனவரி, 1 முதல் திருச்சி - கரூர் - சேலம் இடையே பயணிகள் ரயில், கழிப்பிட வசதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலை எம்.பி., ஜோதிமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் உடனிருந்தனர்.
29-May-2025