பகவதியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
பகவதியம்மன் கோவிலில்முகூர்த்தக்கால் நடும் விழாகுளித்தலை, நவ. 29-குளித்தலை, கடம்பர் கோவில் அருகே பகவதி அம்மன், கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா டிச.,12ல் நடைபெற உள்ளது.இதையொட்டி, யாகசாலையில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. பால், தயிர், மஞ்சள் திரவியங்கள் கொண்டு முகூர்த்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, முகூர்த்தகாலை எடுத்துக் கொண்டு யாகசாலையில் வைத்து நவதானியங்கள், பால் ஊற்றி நட்டு வைத்தனர். பகவதி அம்மன் கோவில் தெரு பக்தர்கள், கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.