தேசிய அளவில் தடகள போட்டி கரூர் மாவட்ட மாணவர் தகுதி
தேசிய அளவில் தடகள போட்டிகரூர் மாவட்ட மாணவர் தகுதிகரூர், செப். 29--மாநில அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற கரூர் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில இளையோருக்கான தடகள போட்டிகள் செப்., 19- முதல், 22- வரை ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து, 3, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கரூர் மாவட்ட தடகளச் சங்கம் சார்பில், 80 பேர் பங்கேற்றனர். 20 வயதுக்குள்பட்ட, 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில், கரூர் மாணவர் விக்னேஷ், 52.20 வினாடிகள் ஓடிவந்து தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, அக். 25 -முதல், 29- வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தமிழக அணி சார்பில் கலந்து கொள்ள தேர்வுபெற்றுள்ளார். 20 வயதுக்குள்பட்ட பிரிவில் தொடர் ஓட்டத்தில் கரூர் மாவட்ட அணி வீரர்கள் தீபக் கிஷோர், தருண்ராஜ், விக்னேஷ், அரவிந்த் ஆகியோர் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றனர்சிறப்பிடம் பிடித்த வீரர்களுக்கு, தேசிய தடகள சம்மேளன இணைச் செயலாளர் லதா, தடகள சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், இணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.