உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த, 7 நாட்களாக நடைபெற்றது.திட்ட அலுவலர் லீலாவதி தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட மாணவியர், ஆசிரியர்கள் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். முகாம் நடைபெற்ற நாட்களில் வளாக துாய்மை பணி, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு, மரம் நடுதல், சமூக நீதி பற்றிய விழிப்புணர்வு, நுாலகத்தின் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இறுதி நாளான நேற்று திட்ட அலுவலர் லீலாவதி வரவேற்றார். சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கண்மணி, நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி