உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தி அம்மன் கோவிலில் நவராத்திரி மறு பூஜை விழா

க.பரமத்தி அம்மன் கோவிலில் நவராத்திரி மறு பூஜை விழா

கரூர்: க.பரமத்தி, சந்தோஷ் நகரில் அஷ்டநாகேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நவராத்திரி விழா முன்னிட்டு, அம்ம-னுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்பு பால் உள்-ளிட்ட, 18 வகையான திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபி-ஷேகம், சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது.தொடர்ந்து, தினமும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அஷ்-டநாகேஸ்வரி அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு நாளும் மாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி ஒவ்வொரு அலங்-காரம், செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்கள் வழி-பாடு செய்தனர்.விஜயதசமியையொட்டி, ஆதிபகவதி அலங்காரம் செய்யப்பட்டு நிறைவு நாளில் குதிரை வாகனத்தில் கிரிவலமாக வந்து அம்மன் அம்பு போடும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, நேற்று மறுபூஜை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி சிறப்பு வழிபாட்டில் பங்-கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி