மேலும் செய்திகள்
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
09-Jul-2025
ஈரோடு, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 80ம் ஆண்டு திருமுறை மாநாடு மற்றும் 55ம் ஆண்டாக, ௬௩ நாயன்மார் விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ௪ம் தேதி வரை விழா நடக்கிறது. இதை தொடர்ந்து சுந்தரர்மூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயனாருக்கு குருபூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. சுந்தர மூர்த்தி வெள்ளை யானை மீதும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். நாளை மறுதினம் (௪ம் தேதி) மாலை, பஞ்சமூர்த்திகள் தனித்தனியாகவும், ௬௩ நாயன்மார்கள் ஒரே புஷ்ப விமானத்திலும் வீதியுலா வருவர். இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
09-Jul-2025