மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
04-Sep-2025
கரூர் 'பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன், புதிய இன்ஸ்பெக்டராக அழகு ராமு நியமிக்கப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், வடக்கு மண்டலத்துக்கு கடந்த, 29ல் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பசுபதிபாளையத்துக்கு திருச்சி ராம்ஜி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு ராமு நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், திருச்சி மணப்பாறை இன்ஸ்பெக்டர் சீனிபாபு, அரியலுார் மீன்சுருட்டிக்கும், திருச்சி டி.ஐ.ஜி., அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த முத்து, மணப்பாறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.பெரம்பலுார் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் கயல்விழி, மருவத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கும், அரியலுார் குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் பால்ராஜ், அரும்பாவூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதேபோல், திருச்சி மத்திய மண்டல காவல் துறையில், 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
04-Sep-2025