உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நொய்யல் பாலத்தில் விளக்கில்லை இருளால் வாகன ஓட்டிகள் கவலை

நொய்யல் பாலத்தில் விளக்கில்லை இருளால் வாகன ஓட்டிகள் கவலை

அரவக்குறிச்சி, பாலம் கட்டி பல ஆண்டு களாகியும், இதுவரை மின்விளக்குகள் அமைக்காததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூரிலிருந்து ஈரோடு செல்லும் சாலையில், நொய்யல் ஆற்றின் குறுக்கே முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் காலத்தில், பாலம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் தற்போது வரை இருந்து வருகிறது.இந்த பாலம் வழியாக, கரூரிலிருந்து கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவை நாள்தோறும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.பாலம் அமைத்து பல ஆண்டுகளாகியும், மின் விளக்குகள் இதுவரை அமைக்கப்படவில்லை.தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்படுகின்றனர்.மேலும் பாலம் குறுகிய அளவில் உள்ளதால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பாலத்தின் மீது, மின்விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை