உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செவிலியர் மாயம்: போலீசில் புகார்

செவிலியர் மாயம்: போலீசில் புகார்

குளித்தலை, குளித்தலை அடுத்த கள்ளப்பள்ளி பஞ்., ஆண்டியப்பன் நகரை சேர்ந்த ரங்கநாதன், 48, மாற்றுத் திறனாளி. இவரது மகள் லோகபிரியா, 19, நர்சிங் முடித்துவிட்டு. லாலாபேட்டை தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த, 24ல், வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என ரங்கநாதன் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !