உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், திருச்சி மாநில செயற்குழுவின்படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தப்பட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலைப்படி ஓய்வூதியம், ஈமச்சடங்கு நிதி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணைத்தலைவர் மாசிலாமணி, செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மாலதி, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணி உள்பட பலர் கருப்பு உடையணிந்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !