116 வயதில் முதியவர் காலமானார்
குளித்தலை:குளித்தலை அருகே, 116 வயது முதியவர் இறந்ததால் உறவினர்கள், கிராம மக்கள் ஆடிப்பாடி நல்லடக்கம் செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., ஆதனுாரை சேர்ந்தவர் பொன்னுசாமி. 1909ல் பிறந்தவர். விவசாயம் மற்றும் கால்நடை மேய்ச்சல் தொழிலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள், 5 மகள்கள், 15 பேரக்குழந்தைகள், 18 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். வயது மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் மதியம் பொன்னுசாமி தன், 116வது வயதில் இறந்தார். ஆதனுார் உள்பட சுற்று வட்டார மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதி ஊர்வலமாக, அவரது உடலை பூந்தேரில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.