நெடுஞ்சாலைதுறை சார்பில் மைல் கல்லுக்கு பூஜை கரூர், அக். 11--
நெடுஞ்சாலைதுறை சார்பில் மைல் கல்லுக்கு பூஜைகரூர், அக். 11--ஆயுத பூஜையை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில், மைல் கல்லுக்கு வாழை மர தோரணம் கட்டி பூஜை செய்து கொண்டாடினர்.தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாகனங்கள், தொழில் செய்வதற்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், பாடப் புத்தகங்கள் என சரஸ்வதி முன்பாக அவற்றை வைத்து படையலிடுவது வழக்கம். நிறுவனங்களில், ஆயுத பூஜையை தொழிலாளர்களோடு கொண்டாடுவர்.இந்நிலையில், கரூர் மாவட்டம் குட்டக்கடையில் உள்ள கரூர் -- ஈரோடு சாலையோரம் மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை கொண்டாடினர்.இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை கரூர் உட்கோட்ட மேற்கு பிரிவு சாலை ஆய்வாளர் ராஜா தலைமையில், வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி, பூ மற்றும் பொரி, கடலை, தேங்காய் பழம் வைத்து பயபக்தியுடன் வழிபட்டனர்