உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 5 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: கரூர் கலெக்டர் தகவல்

5 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: கரூர் கலெக்டர் தகவல்

கரூர், கரூரில், த.வெ.க., பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களில், 5 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 110 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில், 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம், 41 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்தவமனையில் உடற்கூராய்வுக்குப்பின், அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கூட்ட நெரிசலால் காயமடைந்த, 110 பேரில், 105 பேர் குணமடைந்து, அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஒருவரும், திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், - 2 பேரும், மதுரை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், -2 பேரும் என, 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ