உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திறந்து கிடக்கும் மின் பெட்டி விபத்து ஏற்படும் அபாயம்

திறந்து கிடக்கும் மின் பெட்டி விபத்து ஏற்படும் அபாயம்

கரூர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெருவில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் மின் பெட்டி உள்ளது. இந்த பெட்டி கதவுகள் இல்லாமல் திறந்து கிடக்கிறது. மின்பெட்டியில் உள்ள 'பியூஸ் கேரியர்' மற்றும் மின் ஒயர்கள் வெளியில் தெரிகின்றன. இதை எதிர்பாராத விதமாக தொட்டால், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. மழை பெய்யும் பட்சத்தில், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உடைந்த பெட்டியை சீரமைத்து மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ