மேலும் செய்திகள்
ரூ.4.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
10-Sep-2025
கரூர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேட்டில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய்த் துறை சார்பில், 10 பேருக்கு வருமானச் சான்று, பிறப்பிட சான்று உள்ளிட்டவைகளையும், மாநகராட்சி சார்பில், 8 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணை, எரிசக்தி துறை சார்பில் இருவருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணைகள் என மொத்தம், 20 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து க.பரமத்தி அருகில் மொஞ்சனுார் கிராமம், தொட்டம்பட்டியில் பகுதி நேர நுாலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி மேயர் கவிதா, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், துணை மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.
10-Sep-2025