மேலும் செய்திகள்
அரசு பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா
09-Nov-2024
குளித்தலை: குளித்தலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு, 28 வது திட்டத்தின் கீழ் கூடுதலாக, ஐந்து வகுப்பறை கட்டடம், ஒரு கோடியே, 59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் கரூர் கலெக்டர் தங்கவேலு, குளித்தலை சப்--கலெக்டர் சுவாதி ஸ்ரீ, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா மற்றும் கல்வித்துறை அதிகா-ரிகள் குத்து விளக்கு ஏற்றி வைத்து, புதிய வகுப்பறை கட்டடங்-களை பார்வையிட்டனர். பின் மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பி-னர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தாசில்தார் இந்துமதி, துணை தாசில்தார் சித்ரா, டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் வரு-வாய்த்துறை, காவல்துறை, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
09-Nov-2024