உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாநகராட்சி வரி இனங்களை 4 இடங்களில் செலுத்த வாய்ப்பு

கரூர் மாநகராட்சி வரி இனங்களை 4 இடங்களில் செலுத்த வாய்ப்பு

கரூர்: கரூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை, நான்கு இடங்களில் செலுத்தலாம் என, ஆணையர் சுதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கரூர் மாநகராட்சியில் மொத்தம், 48 வார்டுகள் உள்ளன. 2024-25ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலி இட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரி இல்லாத இனங்கள் செலுத்தும் வகையில், நான்கு கணினி வசூல் மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாநகராட்சி அலுவலகம், வாங்கப்பாளையம் கதர் அலுவலகத்தில் உள்ள, 1 வது மண்டல அலுவலகம், கரூர் செங்குந்தபுரம் மூன்றாவது கிராசில் உள்ள, இரண்டாவது மண்டல அலுவலகம், கரூர் தெற்கு காந்தி கிராமத்தில் உள்ள, மூன்றாவது மண்டல அலுவலகம், தான்தோன்றிமலையில் உள்ள, நான்காவது மண்டல அலுவலகத்தில் வரி இனங்களை பொதுமக்கள் செலுத்தலாம். மேலும், அனைத்து அலுவலக நாட்களிலும், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் வசூல் மையம் செயல்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை