உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாதாள சாக்கடை மூடிகளை மாற்ற உத்தரவு

பாதாள சாக்கடை மூடிகளை மாற்ற உத்தரவு

கரூர்: கரூர் மாநகராட்சி பகுதிகளில், சேதமடை ந்துள்ள பாதாள சாக்-கடை மேல் மூடிகளை மாற்ற வேண்டும் என, மேயர் கவிதா தெரிவித்தார்.கரூர் மாநகராட்சி சிறப்பு கூட்டம், நேற்று கூட்ட அரங்கில் நடந்-தது. அதில், நடந்த விவாதம் வருமாறு:மேயர் கவிதா: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கரூர் மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்துள்ள, பாதாள சாக்கடை மேல் மூடிகளை உடனடியாக மாற்ற வேண்டும்.ஆணையாளர் சுதா: மாநகராட்சிக்கு புதிய அதிகாரிகள் வந்துள்-ளனர். விரைவில், சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகள் மாற்றப்படும். ஸ்டீபன் பாபு (காங்.,): எனது மண்டல அலுவலகத்தில், கடந்த நான்கு மாதங்களாக ஏ.இ., பணியிடம் காலியாக உள்ளது. சாக்-கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.தண்டபாணி (மா.கம்யூ.,): கரூர் மாநகராட்சி பகுதியில், பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பூமி பூஜை போட்டு இரண்டு மாதங்களாகிறது. பணிகள் தொடங்கவில்லை. ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்து விட்டால், பணிகள் விரைவாக நடக்காது.மேயர் கவிதா: கரூர் மாநகராட்சி பகுதிகளில், பூமி பூஜை இடத்தில், பணிகளை தொடங்கும் வகையில், கான்ட்ராக்டர்-களை அழைத்து மீட்டிங் போடுங்கள். பணிகளை தொடங்க நட-வடிக்கை எடுங்கள்.தினேஷ் குமார் (அ.தி.மு.க.,): கரூர் ஐந்து சாலை கோடீஸ்வரன் கோவில் முன், பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்ய-வில்லை.மேயர் கவிதா: சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.சுரேஷ் (அ.தி.மு.க.,): மழைக்காலம் தொடங்கிய நிலையில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. எனது வார்டில் மூன்று ஆண்டு-களாக, கொசு மருந்து அடிக்கவில்லை.ஆணையாளர் சுதா: வார்டு வாரியாக கொசு மருந்து அடிக்கும் பணிக்காக ஊழியர்கள் உள்ளனர். அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுங்கள். அனைத்து வார்டுகளிலும், கொசு மருந்து அடிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ