உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெறிநாய் கடித்ததில் 15க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

வெறிநாய் கடித்ததில் 15க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் யூனியன் தரகம்பட்டி பகுதியில், நேற்று காலை பைக்கில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள், கடையில் பொருள்களை வாங்க வந்தவர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களை, சுற்றித்திரிந்த வெறிநாய்கள் கடித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி, வீ த லீடர்ஸ் தன்னார்வலர் பொறியாளர் நவீன்குமார் கூறியதாவது:தரகம்பட்டி பஞ்., பகுதியில் நேற்று காலை, 15க்கும் மேற்பட்ட தொழிலாளர், விவசாயிகளை வெறிநாய்கள் கடித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள், மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறி நாய்களால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மக்கள் நலன் கருதி, சுற்றித்திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை