வீரகுமாரன்பட்டி பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி, கொம்பாடிப்பட்டி, பிள்ளபாளையம், ஆகிய பகுதியில் நெல் சாகுபடியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். கடந்த, 15 நாட்களுக்கு முன், விதைகள் துாவப்பட்டு நாற்றுவிடப்பட்டது. தற்போது, நாற்றுகள் நன்கு வளர்ந்து, பயிர் நடவுக்கு தயாராக உள்ளது. முன்னதாக, வயல்களில் பசுந்தாள் உரமிட்டு, டிராக்டர் கொண்டு உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. உழவுப்பணி முடிந்ததும், நாற்று நடவுப்பணி நடக்க உள்ளது. வாய்க்காலில் தண்ணீர் வரத்து சீராக உள்ளதால், தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லையென விவசாயிகள் தெரிவித்தனர்.