உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்சாரம் தாக்கியதில் பெயின்டர் பலி

மின்சாரம் தாக்கியதில் பெயின்டர் பலி

கரூர்: கரூர் அருகே, சுவருக்கு பெயின்ட் அடிக்கும் போது, மின்சாரம் தாக்கியதில் பெயின்டர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், புலியூர் அமராவதி நகரை சேர்ந்தவர் ராமு, 60, பெயின்டர். இவர் கடந்த, 4 ல் புலியூர் லட்சுமணன் நகரில் உள்ள சிவகாமி என்பவரது வீட்டில், சுவரில் பெயின்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், படுகாயமடைந்த ராமு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகுறித்து, ராமுவின் மனைவி மல்லிகா, 49, கொடுத்த புகாரின்படி பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்-பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி