கரூர் கிளை சிறையில் ஓவிய போட்டி
கரூர்:தேசிய நுாலக வார விழாவையொட்டி, கரூர் கிளை சிறையில் ஓவிய போட்டி நேற்று நடந்தது.கரூர் மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். பிறகு, 40க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்ற ஓவிய போட்டி நடந்தது. நிகழ்ச்சியில், தாசில்தார் மோகன் ராஜ், துணை தாசில்தார் ஜெக-மணி, பசுமை ஒருங்கிணைப்பாளர் பொன்னி ரமேஷ், ஓவிய ஆசிரியர் கலை முதுமணி, துரைராஜ், வாசகர் வட்ட தலைவர் தீபம் சங்கர், சிறை கண்காணிப்பாளர் முருகன் உள்பட பலர் பங்-கேற்றனர்.முன்னதாக, தேசிய நுாலக வார விழாவையொட்டி, கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் புத்தக கண்காட்சி திறப்பு விழா நடந்தது. மாவட்ட மைய நுாலகர் மேரி ரோசரி சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.