மேலும் செய்திகள்
மாநில ஓவியப்போட்டி
14-Nov-2024
அரசு அருங்காட்சியகத்தில்மாணவர்களுக்கு ஓவிய போட்டிகரூர், நவ. 15-கரூரில் உள்ள -அரசு அருங்காட்சியகத்தில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி நடந்தது.அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் தலைமை வகித்தார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அருங்காட்சியகத்தில் நடந்த ஓவியப்போட்டியில் பங்கேற்றனர். இதில் ஆறாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவ-, மாணவிகளுக்கு இயற்கை காட்சிகள் என்ற தலைப்பிலும். 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நேருவும் குழந்தைகளும் என்ற தலைப்பிலும் போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு பள்ளிகளிலிருந்து, 80க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் அலுவலர் நந்தகுமார் பரிசு வழங்கினார். -
14-Nov-2024