கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி
கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மஹா கும்பாபி ேஷக விழாவுக்காக, பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கரூர் மாவட்டம், தான்தோன்றி மலையில் பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. அதில் கடந்த, 2014ல் மஹா கும்பாபி ேஷக விழா நட ந்தது. 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று காலை கோவில் வளாகத்தில் யாக பூஜை மற்றும் பாலாலயம் நிகழ்ச்சிகள் நடந்தன.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, கலெக்டர் தங்க வேல், டி.ஆர்.ஓ., கண்ணன், துணை மேயர் தாரணி சரவணன், அறங்காவலர் குழு தலைவர் பால்ராஜ், தொழில் அதிபர் தியாகராஜன், கோவில் செயல் அலுவலர் இளையராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.