மேலும் செய்திகள்
மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
31-Jul-2025
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.டி.என்.பி.எல்., புகழூர் மேல்நிலைப் பள்ளியில், அரவக்குறிச்சி அளவிலான குறுவட்ட போட்டிகள் நடந்தன. இதில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில் ஓட்டப்போட்டியில், 9ம் வகுப்பு மாணவர்கள் முகமது அதுனான் முதலிடம், 200 மீட்டர் ஓட்டத்தில் முகமது நிமத் முதலிடம், 400 மீட்டர் ஓட்டத்தில் ரித்தீஷ் மூன்றாம் இடம், 600 மீட்டர் ஓட்டத்தில் சேக் மக்துாம் மூன்றாம் இடம் பெற்றனர். மேலும் இம்மாணவர்கள் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றனர்.மூத்தோர் பிரிவில், 800 மீட்டர் ஓட்டத்தில் பிளஸ் 1 மாணவர் முகம்மது நிஹால் பிர்னாஸ் மூன்றாம் இடம், 3,000 மீட்டர் ஓட்டத்தில் பிளஸ் 2 மாணவர் கார்த்திக் மூன்றாம் இடம், ஈட்டி எறிதலில் பிளஸ் 1 மாணவர் சத்தியமூர்த்தி மூன்றாம் இடமும் பெற்றனர். மேலும் இம்மாணவர்கள் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும், 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றனர். மேலும் மிக மூத்தோர் பிரிவிலும் இப்பள்ளி மாணவர்கள் பல போட்டிகள் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி தாளாளர், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டி செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
31-Jul-2025