மேலும் செய்திகள்
குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டுனர்கள் அவதி
20-Mar-2025
கிருஷ்ணராயபுரம்:பாப்பையாம்பாடி கிராம சாலை, மிகவும் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பையாம்பாடி கிராம பகுதியில் இருந்து, வடம்பாடி வரை தார்ச்சாலை செல்கிறது. இதில் பாப்பையாம்பாடி சாலை வழியாக ஏராளமானோர், வாகனங்களில் கரட்டுப்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.தற்போது பல இடங்களில், கற்கள் பெயர்ந்து சாலை சிதிலமடைந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர். மோசமான சாலையால், விவசாயிகள் விளை பொருட்களை எடுத்து செல்வதில் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20-Mar-2025