உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முள்ளிப்பாடி அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

முள்ளிப்பாடி அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

குளித்தலை: குளித்தலை அடுத்த முள்ளிப்பாடி அரசு நடுநிலை பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசி-ரியர்(பொ) விலாசினி முன்னிலை வகித்தார். இதில், அரசு பள்ளி-களில், 'மணற்கேணி' செயலியை பதிவிறக்கம் செய்து ஆசிரி-யர்கள் பயன்படுத்த வேண்டும் என, தமிழக அரசு தொடக்கக்கல்-வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேல்முருகன் பேசி-யதாவது:தமிழகத்தில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில் நுட்பங்-களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில், 'மணற்கேணி' என்ற செயலி தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்-ளது. இது, ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு-வரப்பட்டுள்ளது. ஆனால், 'மணற்கேணி' செயலியை பதிவி-றக்கம் செய்துள்ள பள்ளிகள் குறைவாகவே உள்ளன. இந்த செய-லியை, அனைத்து ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து, வகுப்-பறை கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்துவதை, ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோர் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு அனைத்து பெற்றோரும், 'மணற்கேணி' செயலி குறித்து விழிப்பு-ணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துலட்சுமி, ஆசிரியர்கள் ஹரிநாயனார், கலைவாணி உள்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !