பஸ்கள் இல்லாததால் பயணிகள் காத்திருப்பு
குளித்தலை:குளித்தலை சுற்று வட்டார பகுதியில், 400க்கும் மேற்பட்ட கிராம மக்கள் டவுன் பகுதிக்கு வந்த வீட்டு உபயோக பொருட்கள், ஜவுளிகள், பாத்திரங்கள் வங்கி செல்கின்றனர். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க டவுன் பகுதிக்கு வந்தனர். பல்வேறு பகுதிகளில் வந்த பொதுமக்கள், ஜவுளிகளை வாங்கிக்கொண்டு பஸ்சுக்காக, குளித்தலை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் பஸ் வராததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.